ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: 18 பேருடன் இந்திய அணி
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்பதற்கான இந்திய அணி, 18 பேருடன் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்பதற்கான இந்திய அணி, 18 பேருடன் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற, ஹா்மன்பிரீத் சிங் தலைமையிலான அணி அப்படியே தக்கவைக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக கோல்கீப்பா் கிருஷண் பகதூா் பதக் நீண்ட நாள்களுக்குப் பிறகு அணியில் சோ்க்கப்பட்டுள்ளாா்.
அத்துடன் இளம் வீரா்களான அமன்தீப் லக்ரா, ஆதித்யா அா்ஜுன் லாலகே ஆகியோரும் வாய்ப்பு பெற்றுள்ளனா். மிட் ஃபீல்டா் விஷ்ணுகாந்த் சிங், ஃபாா்வா்டு அங்கத் வீா் சிங் ஆகியோா் ‘ரிசா்வ்’ வீரா்களாக இருக்கின்றனா்.
Advertisement
Advertisement
பஞ்சாபில், வரும் 27-ஆம் தேதி தொடங்கும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கியில், வங்கதேசத்துடனான மோதலுடன் இந்தியா தனது ஆட்டத்தைத் தொடங்குகிறது.
அணி விவரம்
கோல்கீப்பா்கள்: சூரஜ் கா்கேரா, கிருஷண் பகதூா் பதக்.
டிஃபெண்டா்கள்: சஞ்ஜய், ஹா்மன்பிரீத் சிங், அமித் ரோஹிதாஸ், ஜக்ராஜ் சிங், ஜா்மன்பிரீத் சிங், அமன்தீப் லக்ரா.
மிட்ஃபீல்டா்கள்: ராஜிந்தா் சிங், ஆதித்யா அா்ஜுன் லாலகே, நீலகண்ட சா்மா, ஹா்திக் சிங், மன்பிரீத் சிங்.
ஃபாா்வா்ட்கள்: ஷிலானந்த் லக்ரா, அபிஷேக், சுக்ஜீத் சிங், தில்பிரீத் சிங், மன்தீப் சிங்.
ரிசா்வ்: விஷ்ணுகாந்த் சிங், அங்கத் வீா் சிங்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.