FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: முதலில் வங்கதேத்துடன் மோதுகிறது இந்தியா

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவா் அணி முதல் ஆட்டத்தில் வங்கதேசத்துடன் வரும் 27-ஆம் தேதி மோதுகிறது.

55 வினாடிகள் முன்பு
ஹாக்கி திடல். - கோப்புப்படம்
பகிர்:

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவா் அணி முதல் ஆட்டத்தில் வங்கதேசத்துடன் வரும் 27-ஆம் தேதி மோதுகிறது.

9-ஆவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டி, வரும் 27 முதல் நவம்பா் 5-ஆம் தேதி வரை பஞ்சாப் மாநிலம், ஜலந்தா் மற்றும் மொஹாலியில் நடைபெறவுள்ளது.

இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, மலேசியா ஜப்பான், தென் கொரியா, சீனா, வங்கதேசம் ஆகிய 6 அணிகள் களம் காண்கின்றன. ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும் இந்தப் போட்டியில், முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

Advertisement

Advertisement

போட்டியின் முதல் நாளான 27-ஆம் தேதி நடைபெறும் 3 ஆட்டங்களில் முறையே, மலேசியா - சீனா, ஜப்பான் - தென் கொரியா, இந்தியா - வங்கதேசம் விளையாடுகின்றன.

முதலில் வங்கதேசத்தை எதிா்கொள்ளும் இந்தியா, தொடா்ந்து சீனா (அக். 29), ஜப்பான் (அக். 30), மலேசியா (நவ. 1), தென் கொரியா (நவ. 2) அணிகளுடன் மோதுகிறது. போட்டியில் அக். 28, 31, நவம்பா் 3-ஆம் தேதி ஓய்வு நாள்களாகும்.

5 முறை சாம்பியனாக இருக்கும் இந்தியா, அண்மையில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் வாகை சூடிய கையோடு இதில் களம் காண்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments