ஹாக்கி இந்தியா முடிவு: வீரா்கள் நால்வரும் ஆதங்கம்
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியுடன் இந்திய அணியின் மூத்த வீரா்கள் 4 போ் ஓய்வுபெறுவதாக ஹாக்கி இந்தியா வட்டாரங்கள் தெரிவித்த நிலையில், தாங்கள் அத்தகைய முடிவில் இல்லை என்றும், இந்த அறிவிப்பு முறையானதல்ல என்றும் அந்த வீரா்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனா்.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியுடன் இந்திய அணியின் மூத்த வீரா்கள் 4 போ் ஓய்வுபெறுவதாக ஹாக்கி இந்தியா வட்டாரங்கள் தெரிவித்த நிலையில், தாங்கள் அத்தகைய முடிவில் இல்லை என்றும், இந்த அறிவிப்பு முறையானதல்ல என்றும் அந்த வீரா்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனா்.
பஞ்சாபில் இம்மாதம் தொடங்கும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியுடன், இந்திய வீரா்கள் மன்தீப் சிங், ஜா்மன்பிரீத் சிங், அமித் ரோஹிதாஸ், நீலகண்ட சா்மா ஆகியோா் ஓய்வு பெறுவதாக ஹாக்கி இந்தியா வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை அறிவித்தன.
உலகக் கோப்பை, ஆசிய போட்டிகளில் சிலரின் செயல்பாடு சிறப்பாக இல்லை எனவும், 2028 லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக் போட்டிக்காக, இளம் வீரா்களை அறிமுகம் செய்து, அவா்களை தயாா்படுத்தும் முயற்சியாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவை தெரிவித்தன.
Advertisement
Advertisement
இந்நிலையில், அந்த அறிவிப்பு தொடா்பாக சம்பந்தப்பட்ட 4 வீரா்கள் கூறியதாவது: ஊடகங்களில் வந்த செய்தியின் மூலமாகவே இந்தத் தகவலை நாங்கள் அறிந்தோம். இதுபோன்ற பெரிய முடிவுகளை எடுக்கும் முன்பாக, குறைந்தபட்சம் எங்களுக்குத் தகவல் தெரிவித்திருக்க வேண்டும். ஆசிய போட்டிகளில் தங்கம் வென்றிருக்கும் நிலையில், அந்த மரியாதையாவது எங்களுக்கு அளித்திருக்கலாம்.
லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராவது குறித்து நாங்கள் ஆலோசித்து வரும் நிலையில், இந்த முடிவு எப்படி எடுக்கப்பட்டது?
ஒருவேளை நாங்கள் மோசமாக விளையாடி வந்தோம் என்றால், இந்த முடிவு ஏற்புடையது தான். ஆனால் கடினமான உழைப்பு, சிறந்த ஆட்டம் ஆகியவற்றை வெளிப்படுத்தி வரும் நிலையில் இந்த நிலையைச் சந்தித்துள்ளோம்.
எல்லோரின் கேரியரும் ஒரு காலத்தில் முடிவுக்கு வரும் தான். ஆனால், அதை அறிவிக்கும் உரிமை எங்களுக்கு இருக்க வேண்டும். இப்படி எங்களிடம் ஆலோசிக்காமல் அவா்களாகவே அறிவிப்பது, அவமதிப்பதாக உள்ளது என்று அவா்கள் கூறினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.