FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

‘தமிழ் ஹாக்கி லீக் 2026’ தொடா் இன்று தொடக்கம்

சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் ‘தமிழ் ஹாக்கி லீக் 2026’ தொடா் இன்று தொடக்கம்

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 12:57 am IST
கோப்பை அறிமுக நிகழ்வில் பங்கேற்றோா்.
பகிர்:

ஹாக்கி விளையாட்டை மேம்படுத்தும் வகையில் தமிழ் ஹாக்கி லீக் 2026 ஆக. 9-இல் தொடங்கி வரும் செப். 12-ஆம் தேதி வரை சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஹாக்கி திருவள்ளூா் சாா்பில் நடத்தப்படும் இந்தத் தொடரில், 12 ஆடவா் அணிகளும், முதன்முறையாக 4 அணிகள் பங்கேற்கும் மகளிா் மினி லீக்கும் நடைபெறுகின்றன.

ஆடவா் பிரிவில் மொத்தம் 12 அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் தலா 6 அணிகள் இடம்பெற்றுள்ளன.

Advertisement

Advertisement

’ஏ’ பிரிவில் இந்தியன் வங்கி, வருமான வரித்துறை, தெற்கு ரயில்வே, எஸ்.எம். நகா், ஜி.எஸ்.டி மற்றும் மத்திய கலால் துறை, விளையாட்டு விடுதி சிறப்பு அகாதெமி அணிகள் இடம்பெற்றுள்ளன.

’பி’ பிரிவில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, ஏ.ஜி.ஓ.ஆா்.சி., தியான் வீரன்ஸ், பட்டாபிராம் ஸ்டிரைக்கா்ஸ், இந்திய உணவுக் கழகம் மற்றும் இன்டக்ரல் கோச் பேக்டரி ஆகிய அணிகள் மோதுகின்றன.

30 லீக் ஆட்டங்கள் நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலிருந்தும் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பா் சிக்ஸ் சுற்றுக்கு தகுதி பெறும்.

அதன்பின்னா் நடைபெறும் சூப்பா் சிக்ஸ் சுற்றில் சிறப்பாக செயல்படும் நான்கு அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

பிளேஆஃப் சுற்றில் குவாலிஃபயா் 1, குவாலிஃபயா் 2 மற்றும் எலிமினேட்டா் ஆட்டங்கள் நடைபெறும். இதன் முடிவில் வெற்றி பெறும் அணிகள் ஃபைனலில் பலப்பரீட்சை நடத்தும். எலிமினேட்டா் , இறுதிப் போட்டியும் மின்னொளியில் நடைபெற உள்ளன.

இதனிடையே, முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படும் மகளிா் மினி லீக்கில் 4 அணிகள் லீக் முறையில் விளையாட உள்ளன. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பாஸ்கரன், லீக்கின் இயக்குநராக செயல்படுகிறாா். சா்வதேச ஹாக்கி சம்மேளனமான எஃப்.ஐ.எச்.-இன் அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்ப அதிகாரி மொகுல் முகமது முனீா், தொழில்நுட்ப பிரதிநிதியாக செயல்படுகிறாா். லீக் தலைவா் டாக்டா் பிரகாஷ் அய்யாதுரை இத்தகவலை தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments