முகப்பு
பெங்களூரு

பெங்களூரு பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை நீட்டிப்பு

பெங்களூரு பல்கலைக்கழக தொலைத்தூரக் கல்வி திட்டத்தின் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புக்கான 

Updated On : 5 நவம்பர் 2018, 8:13 am IST
பகிர்:

பெங்களூரு பல்கலைக்கழக தொலைத்தூரக் கல்வி திட்டத்தின் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை பெறுவதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பெங்களூரு பல்கலைக்கழகம்-தொலைத்தூர கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெங்களூரு பல்கலைக்கழகத்தின் தொலைத்தூர கல்வி இயக்குநரகத்தின் சார்பில் வழங்கப்படும் இளநிலை பட்டப்படிப்புகளான பிஏ, பிகாம், பிபிஏ,முதுநிலை பட்டப்படிப்புகளான எம்ஏ, எம்.காம், எம்எஸ்சி (கணிதம்), முதுநிலை பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள், சான்றிதழ் படிப்புகளில் முதலாமாண்டு, இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
அபராதமின்றி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பெறுவதற்கான கடைசி தேதி நவ.30-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரூ. 200 அபராதம் செலுத்தி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களைப் பெற டிச.15-ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்படுகிறது. நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை செலுத்துவதற்கான கடைசி தேதி டிச.30 ஆகும். விரும்பும் மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணமாக ரூ. 550 வசூலிக்கப்படுகிறது. விண்ணப்பங்கள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு w‌w‌w.‌d​c​c​b‌u​b.‌i‌n  என்ற இணையதளத்தில் காணலாம். மேலும் விவரங்களுக்கு 080-22961261 முதல் 22961267 வரையிலான எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments