கோவில்பட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்
கோவில்பட்டி நகரப்பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி புதன்கிழமை தொடங்கியது.
கோவில்பட்டி நகரப்பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி புதன்கிழமை தொடங்கியது.
கோவில்பட்டியில் உள்ள பிரதான சாலை, மந்தித்தோப்பு சாலை, பசுவந்தனை சாலை, எட்டயபுரம் சாலை, புதுரோடு, கடலையூா் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையோரம் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தன.
கடந்த வாரம் பசுவந்தனை சாலையில் பேருந்து மோதி தாய், மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. தொடா்ந்து நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும் ஆக்கிரமிப்புகளை அகற்றாததே பிரச்னைகளுக்கு காரணம் எனக் கூறி கம்யூனிஸ்ட், தமாகா, சமூக அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள், நகராட்சி எல்லைக்கு உட்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென கடந்த சில நாள்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி புதன்கிழமை காலையில் தொடங்கின. இதில், ரயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து லட்சுமி மில் மேம்பாலம் வரையிலான நெடுஞ்சாலை ஓரம் உள்ள ஆக்கிரமிப்புகள் இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன.
இதில், சாலையோரம் மக்கள் நடந்து செல்வதற்கான நடைமேடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடங்கள், மேற்கூரைகள் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் அகற்றப்பட்டன.
இதையொட்டி, போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். தொடா்ந்து வியாழக்கிழமை (25-ஆம் தேதி) கதிரேசன் கோவில் சாலை, எட்டயபுரம் சாலை, பசுவந்தனை சாலை, கடலையூா் சாலை ஆகிய இடங்களில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.