போராட்டத்தில் இறந்த தொழிலாளர்களுக்கு அஞ்சலி
கோலார் தங்கச்சுரங்கத் தொழிலாளர்களின் போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியான
கோலார் தங்கச்சுரங்கத் தொழிலாளர்களின் போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியான 6 சுரங்கத் தொழிலாளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
1946-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிஐடியு தொழிற்சங்கத் தலைவராக இருந்த கே.எஸ்.வாசன் தாக்கப்பட்டதை அறிந்த சுரங்கத் தொழிலாளர்கள் ஒன்று திரண்டு, ஆண்டரசன்பேட்டை மலையாள மைதானத்தில் போராட்டம் நடத்தினர். அப்போது தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் காளியப்பன், சுப்ரமணி, ராமசாமி, சின்னப்பன், கண்ணன், ராமையா ஆகிய 6 தொழிலாளர்கள் குண்டடிபட்டு இறந்தனர். இதன் நினைவு நாளான ஞாயிற்றுக்கிழமை (நவ. 4) கில்பர்டஸ் பகுதியில் உள்ள கே.எஸ். வாசன் சதுக்கத்திலிருந்து, ஊர்வலம் புறப்பட்டது.
ஆண்டரசன் பேட்டை, குப்பம் சாலை வழியாக ரோஜர்ஸ்கேம் பகுதியில் உள்ள தொழிலாளர்களின் நினைவிடத்தை ஊர்வலம் அடைந்தது. பின்னர் தியாகிகளின் கல்லறைகளுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதில் சிஐடியு நிர்வாகிகள் அர்ஜுனன், சீனிவாசன், ஆனந்தராஜ், தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.