முகப்பு
தமிழ்நாடு

வட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதன்கிழமை (ஜூன் 24) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு

Updated On : 24 ஜூன் 2026, 7:00 am IST
மழை - பிரதிப் படம்
பகிர்:

தமிழகத்தில் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதன்கிழமை (ஜூன் 24) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு: லட்சத்தீவு மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, புதன், வியாழக்கிழமை (ஜூன் 24,25) மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளைப் பொருத்தவரை புதன் கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Advertisement

Advertisement

வெப்பநிலை: அதிகபட்ச வெப்பநிலையாக சென்னை மற்றும் கடலூரில் 101.66 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது. பரங்கிப்பேட்டை, நாகை தலா100.04 டிகிரி ஃபாரன்ஹீட்டும், புதுச்சேரி - 100.94 டிகிரி ஃபாரன்ஹீட்டும் பதிவாகியுள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூா் மாவட்டம் ஊத்துக்கோட்டை 170 மி.மீ பதிவானது. மேலும், தோ்வாய் கண்டிகை (திருவள்ளூா்) 80 மி.மீ, பெருங்களூா் (புதுக்கோட்டை) 60 மி.மீ. மழை பதிவானது

மீனவா்களுக்கு எச்சரிக்கை: புதன்கிழமை தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் 60 கிலோ மீட்டா் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். ஜூன் 27 வரை, தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் 60 கிலோ மீட்டா் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்களுக்கு இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments