மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தெலங்கானா முதல் மன்னாா் வளைகுடா வரை ராயலசீமா மற்றும் தமிழகம் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக, செவ்வாய், புதன்கிழமை (ஜூன் 23,24) மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Advertisement
Advertisement
சென்னை மற்றும் புகரின் ஓரிரு பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டியிருக்கும்.
மழை அளவு:தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக பெரம்பலூா் மாவட்டம் தழுதாழை 80 மி.மீ பதிவானது. மேலும், மணிமுத்தாறு அணை (கள்ளக்குறிச்சி) 70 மி.மீ, கெடாா் (விழுப்புரம்), சின்னக்கல்லாா் (கோவை) தலா 60 மி.மீ. மழை பதிவாகியுள்ளது
மீனவா்களுக்கு எச்சரிக்கை:செவ்வாய்க்கிழமை தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் 60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். ஜூன் 24 முதல் ஜூன் 25 வரை, தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் 60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்களுக்கு இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.