முகப்பு
பெங்களூரு

விவசாயிகளின் நலன் காக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

விவசாயிகளின் நலன் காக்க தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.

Updated On : 5 நவம்பர் 2018, 8:10 am IST
பகிர்:

விவசாயிகளின் நலன் காக்க தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
கர்நாடக மாநிலத்தின் பெலகாவியைச் சேர்ந்த 180 விவசாயிகள் தனியார் வங்கியில் பயிர்க்கடன் வாங்கியுள்ளனர். கடனை அடைக்காததால் அந்த வங்கி சார்பில் விவசாயிகள் மீது வழக்குத் தொடரப்பட்டு அதில் விவசாயிகளை கைது செய்ய வாரன்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் கர்நாடக விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெலகாவி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரை தொலைபேசி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை தொடர்புகொண்ட முதல்வர் குமாரசாமி, விவசாயிகளின் நலன் காக்க தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
இதேபோன்றதொரு உத்தரவை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ள முதல்வர் குமாரசாமி, இதுபோன்ற நிகழ்வுகள் குறித்து உடனடியாக அறிக்கை தாக்கல் செய்யுமாறும் கேட்டுக்கொண்டார். பயிர்க்கடன் தள்ளுபடிதிட்டத்தின் கீழ் வருகிற விவசாயிகள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments