ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயர்: இந்தியாவுக்கு டிரம்ப் நன்றி!
ஹைதராபாதில் உள்ள சாலைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பெயர் சூட்டப்பட்டது பற்றி...
ஹைதராபாதில் உள்ள ஒரு சாலைக்கு தன்னுடைய பெயர் சூட்டப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் நகரம் மற்றும் தெலங்கானா மாநிலத்தை தொழில்நுட்பரீதியாக மேம்படுத்த அந்த மாநில நகரங்கள் தெருக்கள் போன்ற இடங்களுக்கு சர்வதேச அளவில் பிரபலமான தலைவர்களின் பெயர்களைச் சூட்டும் முயற்சியில் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது.
அதன்படி, ஹைதராபாதில் அமெரிக்க துணைத் தூதரகம் உள்ள பகுதியில் அமைந்துள்ள ஒரு சாலைக்கு ”டொனால்ட் டிரம்ப் அவென்யூ” எனப் பெயர் சூட்டப்பட்டது.
Advertisement
Advertisement
இதுகுறித்து டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில், “இந்தியாவின் ஹைதராபாதில் புதிய டொனால்ட் டிரம்ப் அவென்யூ உள்ளது. இதுபோன்று கௌரவிக்கப்படும் முதல் அமெரிக்க அதிபர் நான்தான். நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.
இதேபோல, ஹைதராபாதில் உள்ள ஒரு வெளிவட்டச் சாலைக்கு மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் பெயர் சூட்டப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
US President Donald Trump has expressed his gratitude for a road in Hyderabad being named after him.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.