FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இனி ஹோர்முஸ் இல்லை; டிரம்ப் நீரிணை எனப் பெயர் சூட்டிய அமெரிக்க அதிபர்!

ஹோர்முஸ் நீரிணைக்கு டிரம்ப் நீரிணை எனப் பெயர் சூட்டி அமெரிக்க அதிபர் வெளியிட்ட பதிவு குறித்து...

26 செப்டம்பர் 2026, 3:03 pm IST
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். - படம்: ஏபி.
பகிர்:

ஹோர்முஸ் நீரிணையை டிரம்ப் நீரிணை எனக் குறிப்பிட்ட ஒரு வரைபடத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை (செப். 26) பதிவிட்டிருக்கிறார்.

ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த பிப் 28 ஆம் தேதி தொடங்கிய போர் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாததால் தற்போது வரை தொடர்ந்து வருகிறது.

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களின் விளைவாக உலகளவில் முக்கிய எண்ணெய் வழிப் போக்குவரத்தான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ளது. இதனால், உலகின் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகள் நிலவி வருகின்றன.

Advertisement

Advertisement

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர பல நாடுகள் மத்தியஸ்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அமெரிக்கா - ஈரான் இடையே மறைமுகப் பேச்சுவார்த்தைகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், வளைகுடா நாட்டின் வரைபடத்தில் ஹோர்முஸ் நீரிணை உள்ள பகுதியை வட்டமிட்டு, அதனை டிரம்ப் நீரிணை என்று குறிப்பிட்டுள்ள ஒரு படத்தை டொனால்ட் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் ஒரு பகுதி என டிரம்ப் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

டிரம்ப்பின் பதிவு
summary

US President Donald Trump posted on Saturday (Sept. 26), referring to the Strait of Hormuz as the "Trump Strait."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments