வாகனங்கள் திருட்டு: 3 பேர் கைது
இரு சக்கர வாகனங்கள் திருட்டு வழக்கில், 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இரு சக்கர வாகனங்கள் திருட்டு வழக்கில், 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு ஊரகப் பகுதியான ஆனேக்கல்லைச் சேர்ந்தவர்கள் அஷீமத்கான், சந்தோஷ், மஞ்சுநாத். இவர்கள் மூவரும் இணைந்து பெங்களூரில் பல்வேறு பகுதிகளில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனங்களைத் திருடி வந்தனராம்.
இதுகுறித்து வழக்கு பதிந்த வர்த்தூர் போலீஸார், 3 பேரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ. 30 லட்சம் மதிப்புள்ள 16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.