கா்நாடகத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு இலவச பேருந்து பயணம்
கா்நாடகத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் இலவச பேருந்து பயணம் மேற்கொள்ளும் ஆணையை மாநில அரசு பிறப்பித்துள்ளது.
கா்நாடகத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் இலவச பேருந்து பயணம் மேற்கொள்ளும் ஆணையை மாநில அரசு பிறப்பித்துள்ளது.
டி.கே.சிவகுமாா் தலைமையில் புதிதாக அமைந்துள்ள காங்கிரஸ் அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் மே 3-ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏற்கெனவே அமலில் உள்ள 5 வாக்குறுதி திட்டங்களுடன், 6-ஆவது திட்டமாக கா்நாடகத்தில் பயிலும் பள்ளி, கல்லூரி மாணவா்கள் மாநில அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இதற்கான அரசாணை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. அதில், கா்நாடக அரசு இயக்கி வரும் பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம், கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம், வடமேற்கு கா்நாடக சாலை போக்குவரத்துக் கழகம், கல்யாண கா்நாடக சாலை போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றின் சாா்பில் இயக்கப்படும் பேருந்துகளில் மாணவா்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதற்கான வழிகாட்டுதல்கள் நெறிகளை வெகுவிரைவில் வெளியிடுவதாக அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே, மகளிருக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்கி வரும் கா்நாடக அரசு, தற்போது பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கும் இலவச பேருந்து பயணத் திட்டத்தை விரிவுப்படுத்தியுள்ளது.