முகப்பு
சென்னை

வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

திருத்தணி, ஜூலை 17: தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் செருக்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ÷இதில் மொத்தம் 764 பேர் கலந்து கொண்டனர். இதில் பெண்களுக

Updated On : 20 செப்டம்பர் 2012, 5:12 pm IST
பகிர்:

திருத்தணி, ஜூலை 17: தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் செருக்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

÷இதில் மொத்தம் 764 பேர் கலந்து கொண்டனர். இதில் பெண்களுக்கான ஸ்கேன் பரிசோதனை, புற்றுநோய் பரிசோதனை, இருதய பரிசோதனை, ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.

÷சிறப்பு அழைப்பாளராக பள்ளிப்பட்டு எம்எல்ஏ இ.எஸ்.எஸ்.ராமன் முகாமை தொடங்கிவைத்தார். அப்போது மகப்பேறு நிதி உதவியாக ரூ.3 ஆயிரத்திற்கான காசோலையை 10 பெண்களுக்கு வழங்கினார்.

Advertisement

Advertisement

÷ஊராட்சி மன்றத் தலைவர் ஜி.சம்பத் தலைமை வகித்தார். திருத்தணி ஒன்றியக் குழு தலைவர் பி.ஜோதி, துணைத்தலைவர் எல்.நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எம்.கார்த்திக் வரவேற்றார்.

÷நிகழ்ச்சியில் கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.புருஷோத்தமன், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் கிருஷ்ணமராஜூ, இராமகிருஷ்ணாபுரம் வார்டு உறுப்பினர் ஏ.ஜி.துரைசாமி, வட்டார மருத்துவ அலுவலர் எ.வி.அஸ்வின் வட்டார சுகாதார புள்ளியாளர் கே.சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். ஊராட்சி உதவியாளர் எஸ். இளங்கோவன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.