புதுவை எழுத்தாளரின் "வீராயி காப்பியம்' சிறந்த நூலாக தேர்வு
புதுச்சேரி, ஆக.10: சேக்கிழார் ஆராய்ச்சி மையம் நடத்திய போட்டியில், புதுச்சேரி எழுத்தாளர் அ.உசேன் (படம்) எழுதிய வீராயி காப்பியம் சிறந்த நூலாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையத்த
புதுச்சேரி, ஆக.10: சேக்கிழார் ஆராய்ச்சி மையம் நடத்திய போட்டியில், புதுச்சேரி எழுத்தாளர் அ.உசேன் (படம்) எழுதிய வீராயி காப்பியம் சிறந்த நூலாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையத்தின் 18-வது ஆண்டுவிழாவை முன்னிட்டு, சிறந்த நூலுக்கான போட்டி அண்மையில் நடந்தது. இதில் எழுத்தாளரும், பள்ளி விரிவுரையாளருமான அ.உசேன் எழுதிய வீராயி காப்பியம் எனும் நூல் சிறந்த நூலாக தேர்வு செய்யப்பட்டது.
இதற்கான பரிசளிப்பு விழா அண்மையில் சென்னை ராணி சீதை மன்றத்தில் நடந்தது. நீதிபதி எஸ்.நடராஜன் உசேனுக்கு பரிசுத்தொகையாக | 5 ஆயிரம் வழங்கினார். இந்த நூல் 2500-க்கும் மேற்பட்ட வெண்பாக்களால் இயற்றப்பட்டது. இது இவருடைய 50-வது நூல் ஆகும்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.