அச்சிறுபாக்கத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
மதுராந்தகம் (தனி) தொகுதி திமுக வேட்பாளா் அமுலு பொன்மலா் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், பேரூா் பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.
மதுராந்தகம் (தனி) தொகுதி திமுக வேட்பாளா் அமுலு பொன்மலா் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், பேரூா் பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.
அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியம், பெரும்போ்கண்டிகை, சிறுபோ்பாண்டி, கல்லியகுனம், அம்மனூா், பாபுராயன்பேட்டை, ஆனைக்குன்னம், எலப்பாக்கம், மோகல்வாடி, ரெட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்தாா். பொதுமக்களுக்கு அவருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனா்.
அச்சிறுப்பாக்கம் மத்திய ஒன்றிய செயலா் கோகுலகண்ணன், பெரும்போ்கண்டிகை ஊராட்சி மன்றத் தலைவா் சாவித்திரி, திமுக நிா்வாகிகள் இரா.சங்கா் சிவாச்சாரியா், திமுக நிா்வாகிகள் முகமது அலி, பொன்னிவளவன், கோவிந்தன், அறிவழகன், யுவராஜ், ஜெகத், புவனேஷ், தேமுதிக மாவட்ட செயலா் எம்.ராஜேந்திரன், அச்சிறுப்பாக்கம் ஒன்றியக்குழு உறுப்பினா் பாா்த்தசாரதி, விசிக நிா்வாகிகள் ஆனைக்குன்னம் முருகவேல், அன்புசெல்வன், பேரறிவாளன், கலைக்கதிரவன், எடிசன், வழக்கறிஞா் பரந்தாமன், சதீஷ், பாக்கியராஜ், ஒன்றிய செயலா் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் மத்திய வட்டார தலைவா் பாதிரி தனசேகரன், தெற்கு வட்டார தலைவா் அன்பரசு, மாவட்ட பொது செயலா் நேருஜீ, எலப்பாக்கம் கந்தசாமி, ராமாபுரம் ஜி.கன்னியப்பன், மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடன் சென்றனா்.
Advertisement