முகப்பு
சென்னை

சென்னையில் நாளை இலவச ஒருங்கிணைந்த மருத்துவப் பரிசோதனை: ஈஷா அமைப்பு ஏற்பாடு

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு 'ஈஷா லைப் ஹெல்த் சொல்யூஷன்ஸ்' சார்பில் இலவச ஒருங்கிணைந்த மருத்துவப் பரிசோதனை முகாம் சென்னையில் சனிக்கிழமை (ஏப்.7) நடைபெறவுள்ளது.

Updated On : 6 ஏப்ரல் 2018, 4:15 am IST
பகிர்:

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு 'ஈஷா லைப் ஹெல்த் சொல்யூஷன்ஸ்' சார்பில் இலவச ஒருங்கிணைந்த மருத்துவப் பரிசோதனை முகாம் சென்னையில் சனிக்கிழமை (ஏப்.7) நடைபெறவுள்ளது.
'ஈஷா லைப் ஹெல்த் சொல்யூஷன்ஸ்', எண் 2, கிளப் ஹவுஸ் சாலை, சென்னை என்ற முகவரியில் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறவுள்ள இந்த முகாமில் அலோபதி, ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யோகா நிபுணர்கள் வழங்கும் விரிவான மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும்.
அத்துடன் அன்றாட வாழ்க்கை முறையில் கவனிக்கப்பட வேண்டிய, பின்பற்றப்பட வேண்டியவை குறித்த விழிப்புணர்வு, சரியான உணவு முறை பற்றிய விளக்கம், நோய்த் தடுப்பு முறை, தேவையானவர்களுக்கு மருந்து சாப்பிட வேண்டிய முறை ஆகியவை குறித்த விளக்கங்கள் அளிக்கப்படும். 
இந்த இலவச முகாம் ஏப்.14 வரை நடைபெறும். இது குறித்து மேலும் தகவல் பெற 044-28885333, 83000 45333 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
'பிளாஷ் மாப்': உலக சுகாதார தினத்தை முன்னிட்டு ஈஷா அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் தனித்துவ நடன நிகழ்ச்சி ( 'பிளாஷ் மாப்') மேற்கொள்ளவுள்ளனர். 'அனைவருக்கும் ஆரோக்கியம்' என்ற அடிப்படையில் உலகளவில் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வகையிலும், அனைவரது வாழ்வில் நல்வாழ்வை நிலைநாட்டவும் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை அமைந்தகரையில் உள்ள பிவிஆர் அம்பா ஸ்கை வாக் மாலின் நான்காவது தளத்தில் நடைபெறும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments