ஐஏஎஸ் தேர்வுக்கான இலவச நேர்காணல் பயிற்சி: டிச.29-இல் தொடக்கம்
சென்னை அண்ணாநகர் திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் ஃபோக்கஸ் அகாதெமியில் ஐஏஎஸ் தேர்வுக்கான இலவச
சென்னை அண்ணாநகர் திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் ஃபோக்கஸ் அகாதெமியில் ஐஏஎஸ் தேர்வுக்கான இலவச நேர்காணல் பயிற்சி வரும் சனிக்கிழமை (டிச.29) முதல் நடைபெறவுள்ளது.
ஐஏஎஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்கான 2018-ஆம் ஆண்டின் முதன்மைத் தேர்வின் முடிவுகளை தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டது. இதன் இறுதிக் கட்டத் தேர்வான நேர்காணல் எனப்படும் ஆளுமைத் தேர்வு வரும் பிப்.4-ஆம் தேதி தொடங்கவுள்ளது. நேர்காணலுக்குத் தகுதி பெற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழிகாட்டும் வகையில் இப்பயிற்சி நடைபெறவுள்ளது. தமிழ் வழியிலேயே நேர்முகத் தேர்வினை எதிர்கொள்ளும் தேர்வர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதில் கலந்து கொள்ள கட்டணம் ஏதும் இல்லை.
வரும் டிச.29 முதல் தொடங்கவுள்ள இந்தப் பயிற்சி ஜனவரி மாதம் வரை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ந்து நடைபெறும். இதில் கலந்து கொள்ள விரும்பும் தகுதியும், ஆர்வமும் உள்ள தேர்வர்கள் ஃபோக்கஸ் அகாதெமியில் நேரில் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 70101 36605, 82489 51454 ஆகிய செல்லிடபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.