வேளச்சேரி - தாம்பரம் சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர் ஏன்?
தாம்பரம் சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர் வைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து...
தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரையிலான சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை எனப் பெயர் சூட்டி முதல்வர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்திய ராணுவத்தில் திறம்படப் பணியாற்றி, பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின்போது வீரமரணம் அடைந்தவரும், மரணத்திற்குப் பிறகு, இந்திய அரசின் அமைதிக்கால உயரிய விருதான அசோக் சக்ரா விருது பெற்றவருமான மேஜர் முகுந்த் வரதராஜனின் தியாகத்தைப் போற்றுகின்ற வகையில், தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட தாம்பரம் இரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரையிலான சாலைக்கு “மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை” எனப் பெயர் சூட்டிட வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், இந்திய ராணுவத்தின் தென்னிந்திய பகுதிகளுக்கான தளபதி லெப்டினண்ட் ஜெனரல் திரு.வி. ஶ்ரீஹரியை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.
Advertisement
Advertisement
இந்தக் கோரிக்கையினைக் கனிவுடன் பரிசீலித்த முதல்வர், இக்கோரிக்கையின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதனடிப்படையில், தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரையிலான சாலைக்கு, இந்தியத் திருநாட்டிற்காகப் போராடி உயிர்நீத்த வீரரின் மாபெரும் தியாகத்தைப் போற்றுகின்ற வகையில், தமிழில் மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை எனவும், ஆங்கிலத்தில் “MAJOR MUKUND VARADARAJAN SALAI” எனவும் பெயர் சூட்டுவதற்கான அரசாணை ஜூன் 23 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
தாம்பரம் சாலைக்கு முகுந்த் வரதராஜன் பெயர் ஏன்?
மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்கள், தாம்பரம் மாநகராட்சி உட்பட்ட அனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் தாம்பரத்தில் உள்ள சென்னை கிறித்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பினை நிறைவுசெய்து பின்னர் ராணுவத்தில் பணிபுரிந்து திறம்படப் பணியாற்றி, பணியின்போது வீரமரணம் அடைந்ததால் இவர் “தாம்பரம் மண்ணின் மைந்தர்” எனப் போற்றப்பட்டு வருகிறார். இக்காரணத்தால், வேளச்சேரி - தாம்பரம் சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
Velachery-Tambaram Road named after Major Mukund Varadarajan Government order issued
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.