ரூ. 60 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்: தம்பதி கைது
காரில் வந்த கும்பல் தன்னை தாக்கி ரூ.60 லட்சம் ரொக்கத்தைக் கொள்ளையடித்துச் சென்றதாக பீர்க்கன்கரணை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த இளைஞரும், அவரது
காரில் வந்த கும்பல் தன்னை தாக்கி ரூ.60 லட்சம் ரொக்கத்தைக் கொள்ளையடித்துச் சென்றதாக பீர்க்கன்கரணை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த இளைஞரும், அவரது மனைவியும் கைது செய்யப்பட்டனர்.
திருவல்லிக்கேணியில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ஹவாலா பணத்தைக் கொண்டு செல்வதில் திருச்சியைச் சேர்ந்த முகமது அன்சாரி ராஜா (28) ஈடுபட்டு வந்துள்ளார். இவர் தனது மனைவி ஆர்த்திகாவை சென்னைக்கு அழைத்து வந்து திருமுல்லைவாயிலில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்தார்.
பின்னர் ஞாயிற்றுக்கிழமை கையில் வெட்டுக் காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்ற அவர், காரில் வந்த ஒரு கும்பல் தன்னை தாக்கி விட்டு, ரூ. 20 லட்சத்தை பறித்துச் சென்று விட்டதாக பீர்க்கன்கரணை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில், முகமது அன்சாரி ராஜா பணத்தை தனது மனைவி ஆர்த்திகாவிடம் கொடுத்துவிட்டு, காரில் வந்த கும்பல் பணத்தைப் பறித்துச் சென்றுவிட்டதாக கூறியது தெரியவந்தது.
இதையடுத்து திருமுல்லைவாயிலில் உறவினர் வீட்டில் இருந்த ஆர்த்திகாவிடம் இருந்து ரூ.60 லட்சம் ரொக்கத்தை போலீஸார் கைப்பற்றினர். இதையடுத்து கணவன், மனைவி இருவரும் கைது செய்யப்பட்டனர்.