கடன் தகராறில் பெண் கடத்தல்
சென்னை அமைந்தகரையில் ரூ. 10 லட்சம் கடன் தகராறில் பெண்ணை காரில் கடத்திச் சென்று தாக்கிய நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை அமைந்தகரையில் ரூ. 10 லட்சம் கடன் தகராறில் பெண்ணை காரில் கடத்திச் சென்று தாக்கிய நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்த திலகவேணி, கடந்த 2012 -ஆம் ஆண்டு சகாயராணி என்பவரிடமிருந்து தற்போது அவர் வசித்துவரும் வீட்டை ரூ.50 லட்சம் விலை பேசி முன்பணமாக ரூ. 35 லட்சம் கொடுத்துள்ளார். மீதிப் பணத்தை 2 ஆண்டுகளுக்குள் கொடுத்து விடுவதாகக் கூறி, அதில் ரூ. 5 லட்சம் மட்டுமே அளித்ததாகக் கூறப்படுகிறது.
மீதி ரூ.10 லட்சத்தை தரும்படி சகாயராணி தரப்பினர் பலமுறை கேட்டும் திலகவேணி கொடுக்கவில்லையாம். இதையடுத்து சகாயராணியின் கணவர் தாஸ், திலகவேணியை காரில் கடத்திச் சென்று கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள விடுதியில் அடைத்து வைத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்து தப்பிய திலகவேணி, நீலாங்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். கடத்தல் சம்பவம் நடந்த இடம் அமைந்தகரை பகுதி என்பதால் அங்கு தகவல் அளிக்கப்பட்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.