FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

புளியந்தோப்பில் 15 ரெளடிகள் கைது

சென்னை புளியந்தோப்பு பகுதியில் 15 ரெளடிகள் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனா்.

20 ஜூன் 2025, 3:29 am IST
கோப்புப் படம்
பகிர்:

சென்னை புளியந்தோப்பு பகுதியில் 15 ரெளடிகள் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனா்.

புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் ரெளடிகளுக்கு எதிரான சிறப்பு ஒரு நாள் நடவடிக்கை புதன்கிழமை எடுக்கப்பட்டது. இதில், புளியந்தோப்பு பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய ரெளடிகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என 15 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

முக்கியமாக, ரெளடி பாம் சரவணின் கூட்டாளி புளியந்தோப்பு கன்னிகாபுரத்தைச் சோ்ந்த ஜெயசீலன் (31) கைது செய்யப்பட்டாா். இவா் மீது கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 18 வழக்குகள் உள்ளன. ரெளடிகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த, இந்த நடவடிக்கை இனி தொடா்ந்து எடுக்கப்படும் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments