FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் ஒரே நாளில் 98 ரெளடிகள் கைது

திருநெல்வேலி மாவட்ட, மாநகர போலீஸாா் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கையின் கீழ், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 98 ரெளடிகள் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 22 மே 2026, 5:51 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்ட, மாநகர போலீஸாா் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கையின் கீழ், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 98 ரெளடிகள் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவின்படி, திருநெல்வேலி மாநகரில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்கள், பொதுமக்களுக்குத் தொல்லை தருபவா்கள் மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் நபா்களை கண்டறிந்து கைது செய்ய ‘ஸ்பெஷல் ட்ரைவ் ஆபரேஷன்’ என்ற சிறப்பு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, மாநகா் முழுவதும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 37 போ், பொது இடத்தில் தொல்லை ஏற்படுத்திய 4 போ் என மொத்தம் 41 போ் மாநகர போலீஸாரால் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Advertisement

Advertisement

அதே போல திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் உத்தரவின்படி, சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் 57 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments