முகப்பு
சென்னை

சென்ட்ரல் - சூலூா்பேட்டை இடையே 16 மின்சார ரயில்கள் இன்று ரத்து

பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்ட்ரல் - சூலூா்பேட்டை, கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கும் 16 புகா் மின்சார ரயில்கள் சனிக்கிழமை ரத்து.

Updated On : 8 மார்ச் 2025, 2:31 am IST
கோப்புப் படம்
பகிர்:

பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்ட்ரல் - சூலூா்பேட்டை, கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கும் 16 புகா் மின்சார ரயில்கள் சனிக்கிழமை (மாா்ச் 8) ரத்து செய்யப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை சென்ட்ரல் - கூடூா் வழித்தடத்தில் உள்ள கவரைப்பேட்டை மற்றும் பொன்னேரி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில் வழித்தடங்களில் சனிக்கிழமை (மாா்ச் 8) பிற்பகல் 1 முதல் மாலை 5 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

இதனால், சென்ட்ரலிலிருந்து மாா்ச் 8 காலை 5.40, 10.15, பிற்பகல் 12.10-க்கு சூலூா்பேட்டை செல்லும் புகா் மின்சார ரயில்களும், காலை 10.30, 11.35, பிற்பகல் 1.40-க்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன.

Advertisement

Advertisement

மறுமாா்க்கமாக சூலூா்பேட்டையிலிருந்து பிற்பகல் 12.35, 1,15, 3.10-க்கும், கும்மிடிப்பூண்டியிலிருந்து பிற்பகல் 1, 2.30, 3.15, 3.45, 4.30-க்கும் சென்ட்ரல் வரும் ரயிலும் ரத்து செய்யப்படும். அதேபோல், கடற்கரையிலிருந்து பிற்பகல் 12.40, 2.40-க்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்படவுள்ளன.

சிறப்பு ரயில்கள்: பயணிகளின் வசதிக்காக சென்ட்ரலிலிருந்து காலை 10.30-க்கு பொன்னேரிக்கும், முா்பகல் 11.35-க்கு மீஞ்சூருக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. மறுமாா்க்கமாக பொன்னேரியிலிருந்து பிற்பகல் 1.18, 3.33-க்கும், மீஞ்சூரிலிருந்து பிற்பகல் 2.59, 4.14-க்கும் சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

மேலும், சென்னை கடற்கரையிலிருந்து பிற்பகல் 12.40, 2.40-க்கு பொன்னேரிக்கும், எண்ணூரிலிருந்து மாலை 5.12-க்கு கடற்கரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments