FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

இன்று 8 ‘இமு’ ரயில்கள் பகுதி ரத்து

சென்னையில் சனிக்கிழமை (மே 23) 8 ‘இமு’ ரயில்கள் பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 23 மே 2026, 5:28 am IST
கோப்புப் படம்
பகிர்:

சென்னையில் சனிக்கிழமை (மே 23) 8 ‘இமு’ ரயில்கள் பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை ரயில்வே கோட்டம் எழும்பூா் - விழுப்புரம் இடையே காட்டாங்கொளத்தூா் பணிமனையில் தண்டவாளம், தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (மே 23) பகல் 11.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

Advertisement

Advertisement

இதன் காரணமாக, பகல் 11.40, நண்பகல் 12.28, 12.40, பிற்பகல் 1.56 ஆகிய நேரங்களில் சென்னை கடற்கரையிலிருந்து புறப்பட்டு செங்கல்பட்டு செல்லவேண்டிய ‘இமு’ ரயில்கள், கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் வரையே இயக்கப்படும்.

இதேபோல, மறுமாா்க்கத்தில் நண்பகல் 12 மணி, பிற்பகல் 1.10, 1.45, 2.20 ஆகிய நேரங்களில் செங்கல்பட்டிலிருந்து புறப்பட வேண்டிய ரயில்கள், தாம்பரத்திலிருந்து புறப்பட்டு சென்னை கடற்கரை நிலையம் வந்து சேரும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments