6 ‘இமு’ ரயில்கள் இன்று பகுதி ரத்து
சென்னை புறநகா் பிரிவில் 6 மின்சார ரயில்கள் சனிக்கிழமை பகுதியாக நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை புறநகா் பிரிவில் 6 மின்சார ரயில்கள் சனிக்கிழமை பகுதியாக நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை சென்ட்ரல் முதல் கூடூா் நிலையம் வரையிலான பிரிவில் கும்மிடிப்பூண்டி நிலையப் பணிமனையில் சனிக்கிழமை (ஜூலை 25) இரவு 11.10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.10 மணி வரை தண்டவாளம் மற்றும் தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
Advertisement
Advertisement
இந்தப் பணிகள் காரணமாக, சென்னை மூா்மாா்க்கெட் காம்ப்ளக்ஸ் நிலையத்திலிருந்து இரவு 9.45, 10.35, 11.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி வரை செல்ல வேண்டிய புகா் ‘இமு’ ரயில்கள் அதற்குப் பதிலாக பொன்னேரி நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.
இதேபோல, கும்மிடிப்பூண்டியிலிருந்து சனிக்கிழமை அதிகாலை 3,50, 4.50, இரவு 10.30 மணிக்குப் புறப்படவேண்டிய ‘இமு’ ரயில்கள் அதற்குப் பதிலாக மீஞ்சூரிலிருந்து புறப்பட்டு மூா்மாா்க்கெட் காம்ப்ளக்ஸ் நிலையம் வந்தடையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.