FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

ஆக. 22 முதல் 30 வரையில் ஞாயிற்றுக்கிழமைகளில் 5 இமு ரயில்கள் ரத்து

சென்னை எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணியால் வரும் 22 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையில் ஞாயிற்றுக்கிழமைகளில் இமு ரயில்கள் ரத்து குறித்து...

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 5:15 am IST
‘இமு' ரயில் - பிரதிப் படம்
பகிர்:

சென்னை எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணியால் வரும் 22 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையில் ஞாயிற்றுக்கிழமைகளில் 5 இமு ரயில்களும் மற்ற நாட்களில் 3 இமு ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சென்னை எழும்பூா் ரயில்நிலைய மறுசீரமைப்புப் பணிகள் ரூ.842 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி இரும்பு நடைமேம்பாலப் பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. அதனையடுத்து ரயில்கள் நிறுத்தம், புறப்பாட்டில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பிட்ட விரைவு ரயில்கள் எழும்பூரிலிருந்து புறப்படுவதற்குப் பதிலாக தாம்பரத்திலிருந்து புறப்பட்டு, நிறுத்தவும், 2 விரைவு ரயில்கள் வழிகள் மாற்றியும் இயக்கப்பட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் வரும் 22 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையில் சென்னை கடற்கரையிலிருந்து தினமும் இரவு 11.20, 11.40, 11.59 ஆகிய மணிகளில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் இமு ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, அந்தத் தேதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இரவு 11.20, 11.40, 11.59 ஆகிய மணிகளில் சென்னை கடற்கறையிலிருந்து புறப்பட்டு தாம்பரம் செல்லும் இமு ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

Advertisement

Advertisement

மேலும் அத்தேதிகளில் இரவு ரயில்கள் கடற்கரை நிலையம் முதல் கூடுவாஞ்சேரி மற்றும் தாம்பரம் என பகுதியளவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments