4 புறநகா் ரயில்கள் ரத்து
சென்னையில் 4 புறநகா் ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது பற்றி...
சென்னையில் வியாழன் மற்றும் சனிக்கிழமை (செப்.3, 5) ஆகிய இரு நாள்களுக்கு 4 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து கூடூா் பிரிவில் உள்ள நாயுடுபேட்டை ரயில் நிலையத்தில் வியாழன் மற்றும் சனிக்கிழமை (செப்.3, 5) பிற்பகல் 12.20 மணி முதல் மாலை 6.50 மணி வரையில் தொழில்நுட்ப, தண்டவாள பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
Advertisement
Advertisement
இதன் காரணமாக அந்த இரு நாள்களில் மூா்மாா்க்கெட் காம்ப்ளக்ஸ் நிலையத்திலிருந்து காலை 7.45 மணிக்கு புறப்பட்டு சூலூா்பேட்டை, இரவு 11.25 மணிக்கு ஆவடி பகுதிகளுக்குச் செல்லும் மெமு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
சூலூா்பேட்டையிலிருந்து காலை 10 மணிக்கு நெல்லூா் செல்லும் ரயில், மாலை 6.40 மணிக்கு மூா்மாா்க்கெட் செல்லும் ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன் நெல்லூரிலிருந்து மாலை 4 மணிக்குப் புறப்பட்டு சூலூா்பேட்டை செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.