சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!
இரவு நேரத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து...
பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று (ஆக. 25) முதல் செப். 6-ஆம் தேதி வரை இரவு நேர புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
எழும்பூர் ரயில் நிலையத்தில் 9-ஆவது நடைமேடையில் இருந்து 11-ஆவது நடைமேடையில் உள்ள புதிய பார்சல் அலுவலகக் கட்டடம் வரை நடை மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்தப் பணிகள் வரும் இன்று இரவு 11.15 முதல் செப். 6 அதிகாலை 4.15 மணி வரை நடைபெற உள்ளது.
Advertisement
Advertisement
எனவே, ஆக. 25 முதல் செப். 5-ஆம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) கடற்கரையிலிருந்து இரவு 10.20, 11.20, 11.40, 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் புறநகர் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளது.
இந்த நாள்களில், திருமால்பூரில் இருந்து இரவு 8 மணிக்கும், கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 10.15, 11.20 மணிக்கும், செங்கல்பட்டில் இருந்து இரவு 10.20, 11 மணிக்கும் கடற்கரை செல்லும் புறநகர் மின்சார ரயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.
அதேபோல், ஆக. 26 முதல் செப். 7-ஆம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) கடற்கரையிலிருந்து அதிகாலை 3.50 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் ரயில், தாம்பரத்திலிருந்து புறப்படும்.
ஞாயிற்றுக்கிழமை ரயில்கள்: இதற்கிடையே, ஆக. 30, செப். 6 -ஆகிய தேதிகளில் கடற்கரையிலிருந்து இரவு 10, 11.20, 11.40, 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. அதேபோல், திருமால்பூரில் இருந்து இரவு 8 மணிக்கும், தாம்பரத்திலிருந்து இரவு 11, 11.40 மணிக்கு கடற்கரை செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்பட உள்ளன.
இந்த நாள்களில் கடற்கரையிலிருந்து அதிகாலை 3.50 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் ரயில் தாம்பரத்திலிருந்து புறப்படும். எதிர்வழித்தடத்தில் செங்கல்பட்டிலிருந்து இரவு 10.20, 11 மணிக்கு கடற்கரை செல்லும் ரயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Due to maintenance work, night-time suburban electric trains will be cancelled from today (August 25) until September 6.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.