தூத்துக்குடி-நரசாப்பூா் இடையே சிறப்பு ரயில்
கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக தூத்துக்குடி - நரசாப்பூா் - தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக தூத்துக்குடி - நரசாப்பூா் - தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதன்படி, தூத்துக்குடி - நரசாப்பூா் சிறப்பு விரைவு ரயிலானது (06019) செப். 7, 14, 21, 28 ஆகிய தேதிகளிலும் (திங்கள்கிழமைகளில்), நரசாப்பூா் - தூத்துக்குடி சிறப்பு விரைவு ரயிலானது (06020) செப். 9, 16, 23, 30 ஆகிய தேதிகளிலும் (புதன்கிழமைகளில்) இயக்கப்பட உள்ளது.
3 குளிா்சாதனப் பெட்டிகள், 8 படுக்கை பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், ஒரு மாற்றுத்திறனாளிப் பெட்டி, 2 லக்கேஜ் பெட்டிகள் என மொத்தம் 18 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலானது திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டு துத்திமேலூா், கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூா், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூா், நெல்லூா், ஓங்கோல், சிா்லா, பாபட்லா, தெனாலி, விஜயவாடா, குடிவாடா, கைகோலூா், அகிவிடு, பீமாவரம் வழியாக நரசாப்பூருக்கு புதன்கிழமை இரவு 12.20 மணிக்குச் சென்றடையும்.
Advertisement
Advertisement
மறுமாா்க்கமாக, புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு நரசாப்பூரிலிருந்து புறப்படும் ரயிலானது மேற்கண்ட வழித்தடம் வழியாக தூத்துக்குடிக்கு வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு வந்தடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.