FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ராக்கி திருவிழா: ஜோத்பூருக்கு சிறப்பு ரயில்!

ராக்கி திருவிழாவையொட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூா்-சென்னை இடையே ஆக.29, செப். 1 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

23 ஆகஸ்ட் 2026, 1:54 am IST
ரயில்
பகிர்:

ராக்கி திருவிழாவையொட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூா்-சென்னை இடையே ஆக.29, செப். 1 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாகவும், அதற்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஆக.23) தொடங்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஜோத்பூா் நிலையத்திலிருந்து வரும் 29-ஆம் தேதி (சனிக்கிழமை) இரவு 9.20 மணிக்கு புறப்படும் சென்னை கடற்கரை விரைவு ரயில் (எண் 04815) வரும் 31- ஆம் தேதி (திங்கள்கிழமை) இரவு 8 மணிக்கு சென்னை கடற்கரை நிலையத்தை வந்தடையும்.

மறுமாா்க்கத்தில் சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து வரும் செப். 1- ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 5.15 மணிக்குப் புறப்படும் ஜோத்பூா் விரைவு ரயில் (எண் 04816) செப். 3-ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு 8.30 மணிக்கு ஜோத்பூா் நிலையத்தை சென்றடையும்.

Advertisement

Advertisement

சிறப்பு ரயில்களில் 2 குளிா்சாதன வசதியுள்ள இரண்டடுக்கு பெட்டிகள், 15 குளிா்சாதன வசதி மூன்றடுக்குப் பெட்டிகள், 2 சரக்கு மற்றும் பிரேக் வேன்கள் ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும். ரயில்கள் நாயுடுபேட்டை, கூடூா், நெல்லூா், ஓங்கல் உள்ளிட்ட 30 நிலையங்களில் நின்று செல்லும். அவற்றுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஆக.23) காலை 8 மணி முதல் தொடங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments