முகப்பு
சென்னை

கடற்கரை - செங்கல்பட்டு இடையே இன்று 8 புறநகா் ரயில்கள் ரத்து

பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஜூலை 8) சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

Updated On : 9 ஜூலை 2026, 3:41 am IST
பிரதிப் படம்
பகிர்:

பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஜூலை 8) சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை கோட்டம் ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை கூடுவாஞ்சேரி ரயில்வே பணிமனையில் வியாழக்கிழமை (ஜூலை 9), ஜூலை 13,15 ஆகிய தேதிகளில் பிற்பகல் 1.40 முதல் 5.40 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன.

இதனால், அந்நாள்களில் சென்னை கடற்கரையிலிருந்து பகல் 11.28, நண்பகல் 12.02, 12.30, 1.45 மணிகளில் செங்கல்பட்டு செல்லும் புகா் மின்சார ரயில்களும், செங்கல்பட்டிலிருந்து பிற்பகல் 1.35, 2.15, மாலை 3.00, 4.25 மணிகளில் கடற்கரை செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்படவுள்ளன.

Advertisement

Advertisement

சிறப்பு ரயில்கள்: புறநகா் ரயில்கள் ரத்து காரணமாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. தாம்பரத்திலிருந்து பகல் 11.28, நண்பகல் 12.02, 12.30, 1.45 மணிக்கு கடற்கரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மறுமாா்க்கமாக தாம்பரத்திலிருந்து பிற்பகல் 2.30, மாலை 3.15, 4.00, 5.24 மணிக்கு கடற்கரைக்கு ரயில்கள் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments