FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ரயில் பயணிகள் கவனத்திற்கு... சென்னையில் நாளை(ஜூலை 17) 8 மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து

சென்னையில் நாளை(ஜூலை 17) 8 மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவது தொடர்பாக...

சென்னையில் நாளை 8 மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து - கோப்புப் படம்
பகிர்:

சென்னை: சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜூலை 17) சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதற்குப் பதில் 8 பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், சென்னை எழும்பூா்- விழுப்புரம் இடையே கூடுவாஞ்சேரி ரயில்வே பணிமனையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) பிற்பகல் 1.40 மணி முதல் 5.40 மணி வரை 4 மணி நேரம் தண்டவாளம், தொழில்நுட்பப் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன.

இதனால், இந்நாளில் சென்னை கடற்கரையிலிருந்து பிற்பகல் 11.28, பிற்பகல் 12.02, 12.30, 1.45 ஆகிய மணிகளில் செங்கல்பட்டு செல்லும் புறநகர் மின்சார ரயில்களும், செங்கல்பட்டில் இருந்து பிற்பகல் 1.35 மணி, 2.15, மாலை 3, 4.25 மணிகளில் கடற்கரை செல்லும் மின்சார ரயில்களும்முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன.

Advertisement

Advertisement

சிறப்பு ரயில்கள்

புறநகா் ரயில்கள் ரத்து காரணமாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

சென்னை கடற்கரையிலிருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் 11.28 மணி, 12.02, 12.30, 1.45 ஆகிய மணிகளுக்கு புறப்படும் சிறப்பு ரயில்கள் தாம்பரத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

அதேபோல, மறுமார்க்கமாக தாம்பரத்திலிருந்து பிற்பகல், 2.30, மாலை 3.15, 4, 5.24 மணிக்கு கடற்கரைக்கு ரயில்கள் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

8 electric trains in Chennai fully cancelled tomorrow

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments