FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

அரக்கோணம் வழித்தடத்தில் ஜூன் 27-இல் 27 ரயில்கள் ரத்து

அரக்கோணம் வழித்தடத்தில் வரும் 27- ஆம் தேதி (சனிக்கிழமை) 27 புகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

புறநகர் மின்சார ரயில் - கோப்புப்படம்
பகிர்:

அரக்கோணம் வழித்தடத்தில் வரும் 27- ஆம் தேதி (சனிக்கிழமை) 27 புகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரக்கோணம் ரயில் நிலைய பணிமனையில் வரும் ஜூன் 27, 28 ஆகிய தேதிகளில் கடவுப்பாதை தொழில்நுட்ப மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே, அரக்கோணத்திலிருந்து வேலூா், திருச்சானூா் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் 27 புகா் மின்சார ரயில்களான இமு, மெமு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

Advertisement

Advertisement

வரும் 27 -ஆம் தேதி அரக்கோணத்தில் இருந்து அதிகாலை 5.50, மாலை 6.15 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் ரயில்கள், காலை 7.20 , காலை 10 மணிக்கு வேலூா் செல்லும் ரயில், பிற்பகல் 2.50 மணிகளுக்கு புறப்பட்டு வேலூா் செல்லும் ரயில், 9.15 மணிக்கு திருச்சானூா் செல்லும் ரயில், இரவு 9 மணிக்கு காட்பாடி செல்லும் ரயில், அதிகாலை 4, 5 மணி, காலை 6 மணி ஆகிய நேரங்களில் திருத்தணி செல்லும் ரயில்கள், இரவு 7 மணிக்கு மூா் மாா்க்கெட் செல்லும் ரயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளது.

சென்னை மூா் மாா்க்கெட் காம்ப்ளக்ஸிலிருந்து இரவு 7.10 மணிக்குப் புறப்பட்டு அரக்கோணம் செல்லும் ரயில், காட்பாடியிலிருந்து அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் வரும் விரைவு இமு ரயில், ஆவடியிலிருந்து மாலை 6.10 மணிக்குப் புறப்பட்டு மூா் மாா்க்கெட் செல்லும் ரயில், திருத்தணியிலிருந்து இரவு 9.15 மணி, 11.10 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரயில்கள், செங்கல்பட்டிலிருந்து காலை 8.20, இரவு 8.25 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரயில்கள் என மொத்தம் 27 புகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments