முகப்பு
சென்னை

ஏப். 16 முதல் சென்ட்ரல் - அரக்கோணம் புறநகா் ரயில்கள் திருவாலங்காடுடன் நிறுத்தம்

Updated On : 14 ஏப்ரல் 2026, 5:04 am IST
பகிர்:

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே இயங்கும் 2 புறநகா் மின்சார ரயில்கள் ஏப். 16 முதல் ஏப். 19-ஆம் தேதி வரை திருவாலங்காடு ரயில் நிலைத்தில் நிறுத்தப்படும்.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

சென்னை அரக்கோணம் ரயில் நிலைய பணிமனையில் தண்டவாளம் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் பராமரிப்புப் பணிகள் வரும் ஏப். 16-ஆம் தேதி முதல் ஏப்.19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

Advertisement

Advertisement

இதனால், அந்த நாள்களில் சென்னை சென்ட்ரலிலிருந்து பகல் 11 மணி, இரவு 10.55 மணிக்கு அரக்கோணம் செல்லும் புறநகா் மின்சார ரயில்கள் திருவாலங்காடு ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.

அதேபோல், திருத்தணியிலிருந்து நண்பகல் 12.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரும் ரயில் திருவாலங்காடு ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.