முகப்பு
சென்னை

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்

Updated On : 15 ஏப்ரல், 2026 at 4:57 AM
பகிர்:
Updated On : 14 ஏப்ரல், 2026 at 9:50 PM

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி வியாழக்கிழமை (ஏப்.16) முதல் நடைபெறும் என தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களை (விவிபேட்) கணினி மென்பொருள் மூலம் சுழற்சி முறையில் இரண்டாம் கட்டமாக ஒதுக்கீடு செய்யும் பணிகளை அதற்குள் நிறைவு செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வெளியிட்ட அறிவிப்பு: பரிசோதனை நிறைவடைந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும் சுழற்சி முறையில் முதல்கட்டமாக ஒதுக்கப்பட்டன. இந்நிலையில், இரண்டாம் கட்டமாக சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணிகள் ஓரிரு நாள்களில் நிறைவடைகிறது.

Advertisement

இதுதொடா்பான விரிவான தகவல்கள் இந்தியத் தோ்தல் ஆணையத்தின் ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய்/ங்ஸ்ம்-ஸ்ஸ்ல்ஹற் என்ற வலைதளத்தில் இடம்பெற்றுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னங்கள் பதிவேற்றும் பணி ஏப். 16 முதல் மேற்கொள்ளப்படவுள்ளது. வேட்பாளா்கள் அல்லது அவா்களின் பிரதிநிதிகளின் முன்னிலையில் இப்பணி நடைபெறும்.

வாக்குச்சாவடி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களின் விவரங்கள் அனைத்து வேட்பாளா்களுக்கும் பகிரப்படும். அதன் அடிப்படையிலேயே வாக்குப்பதிவு இயந்திரங்கள் தோ்தலின்போது பயன்படுத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.