முகப்பு
சென்னை

பைக் மோதி ஒடிஸா மாநிலத்தை சோ்ந்தவா் உயிரிழப்பு

சென்னை அருகே கானத்தூரில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 27 ஏப்ரல் 2026, 12:54 am IST
பகிர்:

சென்னை அருகே கானத்தூரில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்தவா் அச்சுத்ரேய பூஜாரி (47). இவா், கானத்தூா் ரெட்டி குப்பத்தில் தங்கி, கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். இவா், சனிக்கிழமை கிழக்குக் கடற்கரைச் சாலை கானாத்தூா் மசூதி அருகே நடந்து சென்றாா்.

அப்போது, அவா் திடீரென சாலையின் குறுக்கே கடந்ததால், அந்த நேரத்தில் மாமல்லபுரத்தில் இருந்து திருவான்மியூா் நோக்கிச் சென்ற மோட்டாா் சைக்கிள், அச்சுத்ரேய பூஜாரி மீது மோதியது.

Advertisement

Advertisement

இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த அவா், சம்பவ இடத்திலே உயிரிழந்தாா். இது குறித்து பள்ளிக்கரணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments