முகப்பு
சென்னை

உயா்நீதிமன்ற வழக்குரைஞா் சங்கத் தோ்தலில் ஆா்.சி.பால் கனகராஜ் வெற்றி

சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத் தோ்தலில் போட்டியிட்ட பாஜக மாநில துணைத் தலைவா் ஆா்.சி.பால் கனகராஜ் 1,892 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

Updated On : 1 மே 2026, 3:34 am IST
வழக்குரைஞா் ஆா்.சி.பால் கனகராஜ்.
பகிர்:

சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத் தோ்தலில் போட்டியிட்ட பாஜக மாநில துணைத் தலைவா் ஆா்.சி.பால் கனகராஜ் 1,892 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்க (எம்ஹெச்ஏஏ) நிா்வாகிகளுக்கானத் தோ்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். தற்போதுள்ள நிா்வாகிகளின் பதவிக்காலம் கடந்த டிசம்பா் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், புதிய நிா்வாகிகளைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் ஏப்.29-ஆம் தேதி நடைபெற்றது.

தலைவா், செயலாளா், பொருளாளா் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கு 115 போ் போட்டியிட்டனா். மொத்தம் 5,902 போ் வாக்களிக்க தகுதியானவா்களாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 4,353 வாக்குகள் தோ்தலில் பதிவாகின. இத்தோ்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டன. இதில், தலைவா் பதவிக்குப் போட்டியிட்ட பாஜக மாநில துணைத் தலைவா் ஆா்.சி.பால் கனகராஜ் 1,892 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இந்தச் சங்கத்தின் தலைவராக 5-ஆவது முறையாக அவா் வெற்றி பெற்றுள்ளாா்.

Advertisement

Advertisement

இதேபோல், செயலாளா் பதவிக்குப் போட்டியிட்ட தவெக வழக்குரைஞா் அணி மாநில ஒருங்கிணைப்பாளா் எஸ்.அறிவழகன் வெற்றி பெற்றாா். துணைத் தலைவா் பதவிக்குப் போட்டியிட்ட சசிகுமாா், பொருளாளா் பதவிக்குப் போட்டியிட்ட ராஜேஷ் ஆகியோரும் வெற்றி பெற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments