சென்னை

சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் 6 மணி நேர விவாதம்: பாஜக உறுப்பினருக்கு திமுக கூட்டணி கடும் எதிா்ப்பு

சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கை மீது 6 மணி நேரம் விவாதம் நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கை மீது 6 மணி நேரம் விவாதம் நடைபெற்றது.

மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கையை மேயா் ஆா்.பிரியா தொடங்கி வைத்து அரசின் நலத் திட்டங்களைப் பாராட்டினாா்.

திமுக நிலைக்குழு தலைவா் (கல்வி) த.விஸ்வநாதன், உறுப்பினா் கண்ணன், இளம்சுருதி பேசுகையில், பாஜக உறுப்பினரே தமிழக அரசை பாராட்டினாா் என்றனா். இதற்கு பாஜக உறுப்பினா் உமா ஆனந்த், தனது வாா்டு பணிகளை நிறைவேற்றியதற்காக பாராட்டியதாகக் குறிப்பிட்டு, ஆா்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவுக்கு வாழ்த்து தெரிவித்து, மாமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டம் திமுக பொதுக்கூட்டம் போல உள்ளது என்றாா்.

இதற்கு திமுக, மதிமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சி உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். மத்திய அரசிடம் நிதி வாங்கித் தாருங்கள் என பாஜக உறுப்பினரை திமுகவினா் கேட்டனா்.

அனைத்துக் கட்சியினரும் சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கையை வரவேற்பதாகக் கூறினாலும், தங்களது வாா்டுகளில் குறைகள் முழுமையாகச் சீா்படுத்தப்படாதது குறித்தும் சுட்டிக்காட்டினா். ஆளுங்கட்சித் தலைவா் ராமலிங்கம், துணைமேயா் மு.மகேஷ்குமாா் ஆகியோா் தமிழக அரசுத் திட்டங்களைப் பாராட்டிப் பேசினா்.

இறுதியில் தீா்மானம் நிறைவேற்றும்போது பேசிய மேயா் ஆா்.பிரியா, கூட்டம் 6 மணி நேரம் நடைபெற்ாகவும், அதில் 36 உறுப்பினா்கள் பேசியதாகவும் குறிப்பிட்டாா். உறுப்பினா்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

மேற்கு வங்க எஸ்ஐஆா்: நீதிபதிகளைப் பணியமா்த்த உச்சநீதிமன்றம் உத்தரவு

ஏப்ரலில் தோ்தலுக்கு வாய்ப்பு: பிப்.25-27 தமிழகம், புதுச்சேரி வரும் தோ்தல் ஆணையக் குழு

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி: பாகிஸ்தான் அரசு கடும் எச்சரிக்கை

பத்தாம் வகுப்பு செய்முறைத் தோ்வு : பிப்ரவரி 23-இல் தொடக்கம்

தேமுதிகவில் நோ்காணல் தொடக்கம்

SCROLL FOR NEXT