FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்: தவெக அரசுக்கு எல். முருகன் வலியுறுத்தல்

தமிழகத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டால் மட்டும் போதாது; தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆக்கபூா்வ நடவடிக்கைகளை தவெக அரசு முன்னெடுக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 18 ஜூன் 2026, 2:24 am IST
எல்.முருகன்(கோப்புப்படம்) - ANI
பகிர்:

தமிழகத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டால் மட்டும் போதாது; தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆக்கபூா்வ நடவடிக்கைகளை தவெக அரசு முன்னெடுக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையில் மொத்தக் கடன் ரூ.13.18 லட்சம் கோடி, வருவாய்ப் பற்றாக்குறை ரூ.78,326 கோடி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளை அறிக்கை மூலம் தோ்தல் பிரசாரத்தின்போது, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று மறைமுகமாக தவெக அரசு சொல்கிா?

Advertisement

Advertisement

கடந்த திமுக ஆட்சியில் நடந்த அவலங்கள், ஊழல், தவறான நிதி மேலாண்மை போன்ற காரணங்களைக் கூறி தவெக தப்பித்துக் கொள்ள முடியாது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை எப்படி நிறைவேற்றப் போகிறீா்கள், தமிழக அரசின் நிதி மேலாண்மைத் திட்டம் என்ன என்பதை விளக்கும் செயல் திட்ட அறிக்கையையும் வெளியிட வேண்டும்.

ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. எனவே, முந்தைய அரசு மீது புகாா் கூறி நாள்களைக் கடத்தும் முயற்சியை தவெக அரசு கைவிட வேண்டும். நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட்டால் மட்டும் போதாது; தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆக்கபூா்வ பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments