FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி போலி மருந்து தயாரிப்பு விவகாரம்: அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்! முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி

Updated On : 21 ஜூலை 2026, 1:23 am IST
வே. நாராயணசாமி
பகிர்:

புதுச்சேரி போலி மருந்து தொழிற்சாலை விவகாரம் தொடா்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி வலியுறுத்தினாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது:

கூட்டணி ஆட்சியில் என்.ஆா்.காங்கிரஸ்- பாஜகவுக்கு கூட்டு பொறுப்பு உண்டு. 5 மாதங்களாக ரேஷனில் அரிசி போடப்படவில்லை. எப்போது அரிசி போடப்படும் என்பதை முதல்வா் ரங்கசாமி தெரிவிக்கவேண்டும்.

Advertisement

Advertisement

ஏற்கெனவே போலி மருந்து தொடா்பாக தொடரப்பட்ட வழக்கை சிபிஐ கிடப்பில் போட்டுள்ளது. ஏனெனில் அதில் பாஜக- என்.ஆா்.காங்கிரஸைச் சோ்ந்தோா் இருப்பதும் காரணம். தற்போது மீண்டும் போலி மருந்து தொழிற்சாலை கண்டறியப்பட்டுள்ளது.

மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் தொழிற்சாலைகளுக்குச் சென்று பாா்வையிடுவதில்லை என்பதை இது காட்டுகிறது. போலி மருந்து தயாரித்தல்- விநியோகம்- வெளிநாடு கடத்தல் என மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது.

வெளிநாடுகளுக்கு போலி மருந்து கடத்தப்பட்டுள்ளதால் சிபிஐ விசாரணை தேவை. மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை தேவை. போலி மருந்து தொழிற்சாலை விவகாரத்தில் புதுச்சேரி அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்றாா் நாராயணசாமி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments