தமிழகத்தில் படிப்படியாக ஊழல் குறைகிறது: நாராயணசாமி!
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி அளித்த பேட்டியில்,
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை காமராஜருடன் துணைநிலை ஆளுநர் ஒப்பிட்டுப் பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது என்று புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சனம் செய்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி,
துறைகள் இல்லாத பதவிக்காலத்தை முடித்த ஜான்குமாரைபோல் தற்போதுள்ள ஐந்து அமைச்சர்களின் காலமும் முடிந்து விடுமோ என்ற அச்சமுள்ளது. ரங்கசாமியின் செயல்பாட்டால் புதுச்சேரிக்கு ஏன் அமைச்சரவை என கேள்வி எழுகிறது. வாக்களித்த மக்களுக்கு என்டிஏ கூட்டணியும், முதல்வரும் துரோகம் செய்கின்றனர் எனக் குற்றம் சாட்டினார். கோப்புகளை வைத்து அதிகாரிகள் தூங்குகிறார்கள் என்றும் முதல்வரை தவிர யாருக்கும் அதிகாரம் இல்லை. பாஜக ஏன் தூங்குகிறது என்று தெரியவில்லை. புதுச்சேரியில் வாய்மூடி மெனனமாக இருக்கக் காரணம் என்ன- இதற்கு பாஜக தலைவர்களும், பொறுப்பாளர்களும் பதில் சொல்ல வேண்டும். என்ஆர்காங்கிரஸ் அடிமைகளின் கட்சி என்றும் முதல்வரைத் தவிர யாரும் பேச மாட்டார்கள்.
Advertisement
Advertisement
பாஜக தனது நிலைப்பாட்டை இதுவரை சொல்லவில்லை. புதுச்சேரி பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, முதல்வர்தான் துறைகள் ஒதுக்குவதில் முடிவு செய்யவேண்டும் என தட்டிக்கழிக்கிறார். கூட்டணி ஆட்சியில் என்ஆர்காங்கிரஸ் - பாஜகவுக்கு கூட்டுப் பொறுப்பு உண்டு. முதல்வர் ரங்கசாமி செய்யாவிட்டால் பாஜகவும் பொறுப்புதான். நிர்வாகம் குட்டிச்சுவராகிவிட்டது எனக் குற்றம் சாட்டினார்.
மேலும், போலி மருந்து விவகாரத்தில் தொடரப்பட்ட வழக்கை சிபிஐ கிடப்பில் போட்டுள்ளதாகவும், அதில் பாஜக, என்ஆர்காங்கிரஸை சேர்ந்தோர் இருப்பதுதான் காரணம் என்றும், தற்போது மீண்டும் போலி மருந்து கம்பெனி கண்டறியப்பட்டுள்ளது. மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் தொழிற்சாலைகளுக்கு சென்று பார்வையிடுவதில்லை எனக் கேள்வி எழுகிறது. இது கூட்டுச்சதி- மருந்து தயாரித்தல்- விநியோகம்- வெளிநாடு கடத்தல் என மிகப்பெரிய ராக்கெட் உள்ளது. வெளிநாடுகளுக்கு போலி மருந்து கடத்தலால் சிபிஐ விசாரணை தேவை. ஆனால், சிபிஐ பாரபட்சமாகச் செயல்படுவதும் தெளிவாகத் தெரிகிறது. மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை. போலி மருந்து தொழிற்சாலை விவகாரத்தில் புதுச்சேரி அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் காமராஜர் பிறந்தநாள் விழாவில் முதல்வர் ரங்கசாமியை காமராஜருடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். காமராஜர் ரெஸ்டோ பாருக்கு ரூ. 40 லட்சம் லஞ்சம் வாங்கினாரா? காமராஜர் ரெஸ்டோ பார்களை பள்ளி, கோயில், குடியிருப்பு பகுதியில் கொண்டு வந்தாரா- தனது கண்ணாடியைக் கழற்றி விட்டு கைலாஷ்நாதன் பார்க்கவேண்டும். அவரது கண்ணாடியில் கோளாறு உள்ளது. கறைபடாத கரத்துக்குச் சொந்தக்காரரான காமராஜரை அவரது நல்லபெயருக்கு ஆளுநர் களங்கம் விளைவிக்கக்கூடாது. பொய் தகவலை மக்கள் மத்தியில் தரக்கூடாது. ஊழல் செய்தால் பதவி பறிப்பேன் எனத் தமிழக முதல்வர் விஜய் போல் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சொல்லத் தயாரா- தமிழகத்தில் படிப்படியாக ஊழல் குறைக்கப்படுகிறது என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
Former Chief Minister Narayanasamy has criticized the Lieutenant Governor's comparison of Puducherry Chief Minister Rangasamy to Kamaraj, stating that the remark is condemnable.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.