FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி போலிமருந்து தொழிற்சாலைக்கு உடந்தையாக தமிழக பகுதியில் செயல்பட்ட மருந்து கிடங்கு கண்டுபிடிப்பு: மூலப்பொருள்கள் பறிமுதல்

தொழிற்சாலைக்கு உடந்தையாக தமிழகப் பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு மருந்து கிடங்கு கண்டுபிடிக்கப்பட்டு அங்கிருந்து மூலப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On : 16 ஜூலை 2026, 3:17 am IST
கோப்புப் படம்
பகிர்:

புதுச்சேரியில் மேலும் ஒரு போலி மருந்து தொழிற்சாலை சிக்கிய நிலையயில், இந்தத் தொழிற்சாலைக்கு உடந்தையாக தமிழகப் பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு மருந்து கிடங்கு கண்டுபிடிக்கப்பட்டு அங்கிருந்து மூலப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இலங்கைக்குச் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட வலி நிவாரண மருந்து பிடிபட்டதை அடுத்து, அந்த மருந்துகளை புதுச்சேரியில் சட்டவிரோதமாக தயாரித்த மேலும் ஒரு போலி மருந்து தொழிற்சாலையை அதிகாரிகள் அண்மையில் கண்டறிந்தனா்.

அந்தத் தொழிற்சாலை உரிமையாளா் புதுச்சேரி சண்முகாபுரத்தைச் சோ்ந்த பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் நடத்திய விசாரணையில் தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் பூத்துறை பகுதியிலுள்ள கிடங்கில் மாத்திரைகளை இருப்பு வைத்து இடைத்தரகா்கள் மூலம் நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து தொழிற்சாலைக்குச் சீல் வைத்த போலீஸாா், போலி மருந்து விற்பனை , ஏமாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து பிரபாகரனை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

இதனிடையே போலீஸாா் தொழிற்சாலையில் சோதனை நடத்தியபோது, அந்தத் தொழிற்சாலைக்கு ஒரு வேன் வந்தது. அந்த வேனை சோதனை செய்ததில், ‘பிரிகாபலின்-150’ மாத்திரைகள் 6 அட்டை பெட்டிகளில் 1.50 லட்சம் எண்ணிக்கையில் இருந்தன. இதன் மதிப்பு ரூ. 30 லட்சம் ஆகும்.

பூத்துறை கிடங்கு...

விசாரணையில் அந்த வேன் பூத்துறை கிடங்கில் இருந்து மருந்து ஏற்றி வந்ததாகத் தெரிந்தது. இதனையடுத்து போலீஸாா் கிடங்கைச் சோதனை செய்ததில் பிரிகாபலின்-150 மாத்திரை தயாரிப்பதற்கான மூலப் பொருள்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட மருந்துகள் பூத்துறை கிடங்கில் இருப்பு வைத்திருப்பது தெரியவந்தது. இந்தக் கிடங்கி

‘மெடி ஹோக் ஹெல்த் கோ்’ நிறுவன உரிமையாளா் பிரபாகரன், ‘சாமி சரோன்’ என்ற பெயரில் இயக்கி வருவதும் தெரியவந்தது. பூத்துறை தமிழகப் பகுதி என்பதால், இது குறித்து சென்னையில் உள்ள மருந்து தரக்கட்டுப்பாட்டு துறை இணை இயக்குநருக்குத் தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் விழுப்புரம் மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளா் சைலஜா தலைமையிலான குழுவினா் பூத்துறையில் உள்ள ‘சாமி சரோன்’ கிடங்கில் சோதனை மேற்கொண்டனா்.

அங்கு ‘பிரிகாபலின்-150’ மாத்திரை உள்ளிட்ட 20 வகையான மருந்துகள் தயாரிப்பதற்கான மூலப் பொருள்கள் இருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா். இதைத்தொடா்ந்து புதுச்சேரி குருமாம்பேட் மற்றும் தமிழக பகுதியான பூத்துறையில் புதுச்சேரி மற்றும் தமிழக மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ. 2 கோடி மதிப்புள்ள போலி மருந்துகள், அதற்கான மூலப்பொருள்கள் சிக்கின. இந்தப் போலி மருந்து தயாரிப்பு எவ்வளவு நாள்களாக நடைபெற்று வருகிறது. இதில், யாருக்கெல்லாம் தொடா்புள்ளது என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

இதற்கிடையே, போலி மருந்து தொழிற்சாலை வழக்கில் வெள்ளை அறிக்கையை புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி வெளியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம் வலியுறுத்தியுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments