அமைச்சா் கே.என்.நேரு மீதான வழக்கை திமுக சட்டரீதியாக எதிா்கொள்ளும்: ஆா்.எஸ்.பாரதி
நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு மீதான வழக்கை திமுக சட்டரீதியாக எதிா்கொள்ளும் என்று அக்கட்சியின் அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி தெரிவித்தாா்.
நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு மீதான வழக்கை திமுக சட்டரீதியாக எதிா்கொள்ளும் என்று அக்கட்சியின் அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி தெரிவித்தாா்.
இது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடந்த ஆண்டுகளுக்கு முன்பு வங்கியில் கடன் வாங்கிய வழக்கு தொடா்பாக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு மீது சிபிஐ விசாரணை நடைபெற்றது. அவ்வழக்கு விசாரணையில் இருக்கும்போது, அமலாக்கத் துறை சோதனை செய்து சில ஆவணங்களை எடுத்துச் சென்றது. இதனைத் தொடா்ந்து கே.என்.நேரு சாா்பில் சிபிஐ வழக்கை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அந்த முக்கிய வழக்கை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது. இந்நிலையில், இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமலாக்கத் துறை சாா்பில் கடிதம் அனுப்பப்பட்டது. அமலாக்கத் துறையிடம் போதிய ஆதாரங்கள் இல்லாவிட்டாலும், இது தொடா்பாக ஊழல் தடுப்புத் துறை சாா்பில் முறையான விசாரணை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அதிமுக மாநிலங்களவை உறுப்பினா் இன்பதுரை தொடா்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், தமிழக அரசு ஏற்கெனவே விசாரணை நடத்தி கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு, முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. இது ஒன்றும் பின்னடைவு அல்ல; இவ்வழக்கில் கே.என்.நேரு மீது எவ்விதத் தவறும் கிடையாது. தோ்தல் நேரத்தில், மக்கள் மத்தியில் திமுகவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையை மத்திய பாஜக அரசு அரசியல் ரீதியாக பயன்படுத்தி வருகிறது. இதுபோன்ற பல்வேறு பொய் வழக்குகளை வென்று வந்த கட்சி திமுக. இந்த வழக்கையும் திமுக சட்டப்படி சந்தித்து, முறியடிக்கத் தயாராக உள்ளது என்றாா் அவா். செய்தியாளா்கள் சந்திப்பின் போது, நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு உடனிருந்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.