முகப்பு
சென்னை

சென்னை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளராக தீப்தி அறிவுநிதி பொறுப்பேற்பு

காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி தீப்தி அறிவுநிதி, சென்னை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.

Updated On : 2 ஜூலை 2026, 3:55 am IST
சென்னை உயா்நீதிமன்றம்
பகிர்:

காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி தீப்தி அறிவுநிதி, சென்னை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.

சென்னை உயா்நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளராக பதவி வகித்த மாவட்ட நீதிபதி எஸ்.அல்லி, ஜூன் 30-ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றாா். இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதியாக பணியாற்றிய தீப்தி அறிவுநிதி சென்னை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளராக நியமிக்கப்பட்டு, புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றி வயது மூப்பின் காரணமாக பணி ஓய்வு பெற்றுள்ள எஸ்.அல்லியை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் ஏற்கெனவே மத்திய அரசுக்கு பரிந்துரைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவா் உத்தரவு பிறப்பித்தால், ஓய்வு பெற்ற அல்லி மீண்டும் உயா்நீதிமன்ற நீதிபதியாகப் பதவி ஏற்பாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments