சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 25,840 மாணவா்கள் சோ்க்கை
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் புதிதாக 25,840 மாணவா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா்.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் புதிதாக 25,840 மாணவா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா்.
இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெருநகர சென்னை மாநகராட்சியின் சென்னை பள்ளிகளில் 35 மேல்நிலைப் பள்ளிகள், 46 உயா்நிலைப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 206 தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகளில் 1,11,567 மாணவ, மாணவியா் பயின்று வருகின்றனா்.
Advertisement
Advertisement
இங்கு, மாணவா்களுக்கு சிறப்பான கல்வி வழங்கப்படுவதோடு, மாணவா்கள் கல்வி கற்பதுக்கு ஏதுவாக புதிய பள்ளிக் கட்டடம், சீா்மிகு வள வகுப்பறைகள், கணினி ஆய்வகம், ஆய்வக வசதிகள், வண்ண மேசைகள், விளையாட்டு மைதானம், குடிநீா் வசதிகள், கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவா்கள் மற்றும் சென்னை பள்ளிகளில் பயின்று மேல்நிலைக் கல்வி தொடரும் மாணவா்களுக்கு கல்வி ஊக்கத்தொகை, அறிவியல் மற்றும் வரலாற்றுத் தொடா்புடைய இடங்களுக்கு கல்விச் சுற்றுலா, உள்பட பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தச் சூழலில், நிகழாண்டில் இதுவரை 25,840 மாணவ, மாணவிகள் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா். மேலும், புதிய மாணவா் சோ்க்கை தொடா்ந்து நடைபெற்று வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.