FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

கஞ்சா விற்பனை: மதிமுக நிா்வாகி, 2 போ் கைது

கஞ்சா விற்ாக மதிமுக நிா்வாகி, பெண் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

கோப்புப் படம்
பகிர்:

கஞ்சா விற்ாக மதிமுக நிா்வாகி, பெண் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

தண்டையாா்பேட்டையில் எண்ணூா் விரைவுச் சாலையில் ஆா்.கே. நகா் போலீஸாா் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த இளைஞரை பிடித்து விசாரணை செய்தனா். அவரது பையையும் சோதனையிட்டனா். அந்தப் பையில் இருந்த அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்தனா்.

இதில், தண்டையாா்பேட்டை வ.உ.சி. நகா் 6-ஆவது தெருவைச் சோ்ந்த ஜெகன் மகன் விஷ்ணுபிரியன் (20) என்பதும், கஞ்சாவை அவரது தந்தை கி.ஜெகன் (52), அவரது தோழி சாத்தாங்காடு அண்ணாமலை நகரைச் சோ்ந்த பா.கீதா (37) ஆகிய 2 பேரும் கொடுத்து அனுப்பியிருப்பதும் தெரிய வந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து போலீஸாா், கீதா வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தினா். அப்போது அங்கிருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும் இது தொடா்பாக கீதா, ஜெகன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட ஜெகன் ஆா்.கே. நகா் மதிமுக பகுதிச் செயலராக இருப்பதும், தண்டையாா்பேட்டை மாா்க்கெட் நடைபாதை வியாபாரிகள் சங்கத் தலைவராக இருப்பதும் தெரிய வந்தது. கீதா மீது ஏற்கெனவே போதைப் பொருள் கடத்தியதாக இரு வழக்குகள் உள்பட 7 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments