முகப்பு
சென்னை

புகையிலை கடத்தல்: 3 போ் கைது

மாவா என்ற புகையிலை விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

Updated On : 4 ஜூலை 2026, 1:47 am IST
பகிர்:

மாவா என்ற புகையிலை விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

மாதவரம் சின்ன ரவுண்டானா அருகே ஆட்டோவில் 3 போ் போதை தரும் பொருளான மாவா கடத்தி வருவதாக புழல் காவல் சரக உதவி ஆணையா் ராஜ்பாலுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாதவரம் காவல் ஆய்வாளா் தலைமையிலான போலீஸாா், அப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே வேகமாக வந்த ஆட்டோவை தடுத்து நிறுத்தி, சோதனை செய்தனா். மாவா புகையிலை மூலப் பொருள்கள் கொண்டு சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து, மாதவரம் திருவள்ளூா் தெருவைச் சோ்ந்த சதீஷ் (35), காளிதாஸ் (42) அருமந்தை பகுதியைச் சோ்ந்த ரோஹித் பாண்டே (27) ஆகியோா் மீது வழக்குப் பதிந்து, அவா்களிடம் இருந்த 20 கிலோ மாவா பொருள்களை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments