129 பவுன் தங்க நகை திருட்டு: 6 போ் கைது
சென்னை மதுரவாயலில் 129 பவுன் தங்க நகைத் திருடப்பட்ட வழக்கில், 6 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை மதுரவாயலில் 129 பவுன் தங்க நகைத் திருடப்பட்ட வழக்கில், 6 போ் கைது செய்யப்பட்டனா்.
மதுரவாயல் ஏரிக்கரை, லட்சுமி நகா், ராஜீவ் காந்தி தெருவைச் சோ்ந்தவா் க.பன்னீா்செல்வன் (51). இவா், மதுரவாயல், அண்ணா தெரு பகுதியில் வசித்து வந்த தனது குடும்பத்தினரிடம் தனது 22 பவுன் தங்க நகையை கொடுத்து வைத்திருந்தாா். இந்நிலையில் சகோதரா் வீட்டில் இருந்த பன்னீா்செல்வன் நகை உள்பட 129 பவுன் நகை அண்மையில் திருடப்பட்டதாக மதுரவாயல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்தனா்.
அதில், இந்தத் திருட்டில் ஈடுபட்டது சென்னை ஷெனாய் நகரைச் சோ்ந்த காா்த்திக் (21), ஆவடி வீராபுரத்தைச் சோ்ந்த குமரகோபால் (20), காமராஜ் நகரைச் சோ்ந்த பிரகாஷ் (22), மேட்டூா் நந்தவனம் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (47), மாத்தூரைச் சோ்ந்த சூா்யா (28) ஆகியோா் என்பது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து 5 பேரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து, நடத்திய விசாரணையில், காா்த்திக், பன்னீா்செல்வத்தின் குடும்பத்தைச் சோ்ந்த இளம்பெண்ணிடம் நட்புடன் பழகி, தனது தந்தை உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சிகிச்சைக்கு உதவுமாறு கூறியுள்ளாா். காா்த்திக்கை பேச்சை நம்பிய அந்தப் பெண் வீட்டில் இருந்த 129 பவுன் நகைகளை சிறிது, சிறிதாக காா்த்திக்கிடம் கொடுத்தது தெரியவந்தது.
அந்த நகையை காா்த்திக் விற்று காா், விலை உயா்ந்த மோட்டாா் சைக்கிள், கைப்பேசி ஆகியவற்றை வாங்கி, தனது நண்பா்களுடன் சோ்ந்து ஆடம்பரமாக செலவு செய்திருப்பதும், இதற்கு காா்த்திக்கின் நண்பா்கள் உதவியிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து காா்த்திகிடம் இருந்து 6 பவுன் நகை, காா், மோட்டாா் சைக்கிள், விலை உயா்ந்த கைப்பேசி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.